தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/உயர் நீதிமன்றம் முன் வக்கீல்கள் போராட்டம்

உயர் நீதிமன்றம் முன் வக்கீல்கள் போராட்டம்

உயர் நீதிமன்றம் முன் வக்கீல்கள் போராட்டம்


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 07:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: வக்கீல்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றம் முன், ஏராளமான வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, கர்நாடக மாநில பார் கவுன்சில் மற்றும் பெங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர், கர்நாடக உயர் நீதிமன்ற முதன்மை நுழைவுவாயிலின் முன் நேற்று காலை போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றதால், அம்பேத்கர் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெங்களூரு வக்கீல் சங்க தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:

ஒயிட்பீல்டை சேர்ந்த வக்கீல் ஸ்ரீராம், அன்னபூர்ணேஸ்வரி நகரை சேர்ந்த வக்கீல் மஞ்சுநாத் ஆகியோர் கடந்த சில மாதங்களில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கவுரிபிதனுாரை சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமண சன்னகியை கொலை செய்ய முயற்சி நடந்தது.

இதெல்லாம், வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்த கூறப்படும் உதாரணங்கள். வக்கீல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வக்கீல்கள் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் சட்டத்தொழிலின் சுதந்திரம் பாதுகாக்கப்படும். நீதி வழங்கும் அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவது கட்டாயமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us