/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குப்பைக்கு வரி தலைவர்கள் எதிர்ப்பு
/
குப்பைக்கு வரி தலைவர்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 02, 2025 06:15 AM
பெங்களூரில் குப்பை கழிவுகளுக்கு வரி விதித்துள்ளதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சியில் குப்பை கழிவுகளுக்கு வரி விதிக்கும் முறை நேற்று அமலுக்கு வந்துள்ளது. வீடுகள், ஹோட்டல்கள், கடைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்றவற்றில் சேரும் குப்பையை சேகரிக்க செல்லும் வாகனங்களுடன் மார்ஷல்களும் செல்வர். இவர்கள் எடை இயந்திரத்தின் மூலம் எடை பார்ப்பர். இந்த சொத்து வரியுடன் சேர்த்து கணக்கிடப்படும்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி: கர்நாடகா அரசு, நாட்டிற்கு ஒரு குப்பையாக மாறிவிட்டது. தற்போது, கர்நாடகாவில் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. குப்பைக்கு கூட மக்கள் வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையை மாநில அரசு உருவாக்கி உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் அரசு திவால் ஆகிவிட்டது. இதை மறைப்பதற்காகவே, பொது மக்கள் மீது கூடுதல் வரிகளை விதித்து உள்ளது.
மத்திய அமைச்சர் குமாரசாமி: காங்கிரஸ் அரசு, குப்பைக்கு கூட வரி விதிக்கிறது. இதன் மூலம் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா: மாநில அரசு வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அனைத்து பொருட்களின் மீதும் வரிகள் விதித்து வருகிறது. வாக்குறுதி திட்டம் என்ற பெயரில் பணத்தை கொடுத்துவிட்டு, மறுபுறம் பல வழிகளில் பொது மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

