ADDED : ஆக 21, 2025 06:57 AM
கர்நாடக ஏரி பாதுகாப்பு, மேம்பாட்டு திரு த்த சட்டம் - 2025 மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஏரிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அதற்கு மத்தியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக மேல்சபை தலைவராக இருக்கும் பசவராஜ் ஹொரட்டி, கடந்த 1980 ம் ஆண்டு முதல் கர்நாடகா மேற்கு ஆசிரியர் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளார். 45 ஆண்டுகளாக மேல்சபையில் அங்கம் வகிக்கும் அவரது சேவையை, அனைத்து கட்சி உறுப்பினர்கள் நேற்று பாராட்டி பேசினர்.
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமூகத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியில் 13,433 கோடி ரூபாயை, ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தியதாக, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா சட்டசபையில் நேற்று ஒப்பு கொண்டார்.
தலித் சமூகத்தினருக்கு அவர் அநீதி இழைத்து விட்டதாக, பா.ஜ., உறுப்பினர் கள் கடுமையாக சாடினர்.
சட்டசபையில் முதல்வர் இல்லாத நேரத்தில், துணை முதல்வர் சிவகுமாரை தான் முதல்வர் என்று குறிப்பிடுவோம் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறினார்.