/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது
/
மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது
ADDED : ஜூலை 31, 2025 10:58 PM
துமகூரு: ஒரே நாளில் ஐந்து பேரை தாக்கி, மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது.
துமகூரு மாவட்டத்தின் நடுவனஹள்ளி கிராமத்தில், சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது. நேற்று முன்தினம் கிராமத்தின் சிவண்ணா என்பவரின் மனைவி வனஜாக்ஷி, தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சிறுத்தை, அவர் மீது பாய்ந்து கடித்துவிட்டுத் தப்பியது. காயமடைந்த வனஜாக்ஷி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இங்கிருந்து ஓடிய சிறுத்தை, கோனி துமகூரு கிராமத்துக்கு சென்றது. அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஹுச்சம்மா என்பவரை தாக்கியது. அதன்பின் அதே கிராமத்தில் வசிக்கும் போரே கவுடாவையும் கடித்து காயப்படுத்தியது. பின், அங்கிருந்து தப்பி தேவிஹள்ளி கிராமத்துக்கு வந்த சிறுத்தை, சேகர் என்பவரை தாக்கியது.
அங்கும், இங்கும் நடமாடிய சிறுத்தை, நேற்று முன்தினம் இரவு சேகரின் வீட்டுக்குள் சென்று பதுங்கியது. அவரது குடும்பத்தினர் கதவை வெளிப்புறமாக பூட்டி, சிறுத்தையை உள்ளேயே சிறை வைத்தனர். வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் நேற்று காலை கிராமத்துக்கு வந்து, வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த சிறுத்தையை, மயக்க ஊசி போட்டு பிடித்தனர். அதன்பின் கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.