குட்டிகளுடன் சிறுத்தை தாக்குதல் 2 பெண்கள் உட்பட 4 பேர் காயம்
குட்டிகளுடன் சிறுத்தை தாக்குதல் 2 பெண்கள் உட்பட 4 பேர் காயம்
ADDED : ஜூன் 06, 2026 03:54 AM
ஹாசன்: ஹொளேநரசிபுராவில் தனது குட்டிகளுடன் சிறுத்தை தாக்கியதில், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிபுரா தாலுகா கசபா பேரூராட்சிக்கு உட்பட்ட அங்கவள்ளியில், நேற்று காலை நாகராஜ், 55, நவீன், 40, உட்பட தொழிலாளர்கள் பலர் பணியாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது, தனது குட்டிகளுடன் அங்கு வந்த சிறுத்தை ஒன்று, இருவரையும் தாக்கியது. இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட மற்ற தொழிலாளர்கள், சத்தம் போட்டு சிறுத்தைகளை விரட்டினர்.
அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தைகள், கள்ளிமுத்தனஹள்ளி கிராமத்திற்கு சென்றது. அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஜெயம்மா, 70, கே.ஜெயம்மா, 50, ஆகியோரையும் தாக்கி தப்பியது.
படுகாயம் அடைந்த நான்கு பேரும், ஹொளேநரசிபுரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேரில், நாகராஜின் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஹாசன் மாவட்ட கலெக்டர் லதா குமாரி, மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களின் நிலை குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.
