/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1 கோடி போதை பறிமுதல் லைபீரிய பிரஜை கைது
/
ரூ.1 கோடி போதை பறிமுதல் லைபீரிய பிரஜை கைது
ADDED : நவ 12, 2025 06:25 AM
ஒயிட்பீல்டு: பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த, மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்தவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பிதரஹள்ளி அருகே கம்மசந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், போதைப் பொருள் விற்பனை நடப்பதாக, ஒயிட்பீல்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீசார், போதைப் பொருள் விற்ற லைபீரியாவின் பிரின்ஸ், 30, என்பவரை கைது செய்தனர். வீட்டில் இருந்து 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான 537 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள், 40,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கணினி பொறியியல் பட்டதாரியான பிரின்ஸ், வேலை தொடர்பான விசாவில் இந்தியா வந்து, பெங்களூரில் தங்கி இருப்பது தெரிந்தது. 'டார்க்வெப்' இணையம் மூலம், போதைப் பொருளை ஆர்டர் செய்து வாங்கி, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.

