/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலி அழகுசாதன பொருள் விற்றால் ஆயுள் தண்டனை
/
போலி அழகுசாதன பொருள் விற்றால் ஆயுள் தண்டனை
ADDED : நவ 28, 2025 05:50 AM
பெங்களூரு: போலி அழகுசாதன பொருள் விற்பனை செய்வோருக்கு விதிக்கப்பட்டு சிறை தண்டனையை, ஆயுள் தண்டனையாக நீட்டிக்க வேண்டும் என்று, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
பெலகாவியின் சவுந்தட்டி முருகோடு கிராமத்தில் உள்ள, ஐந்து ஏக்கர் அரசு நிலத்தை வளையல் தயாரிக்கும் அறக்கட்டளைக்கு, குத்தகை அடிப்படையில் 35 ஆண்டுகாலம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
க ர்நாடக அரசின் வணிக மேலாண்மை விதிகள் 1977 ன் அட்டவணை 1 ன் கீழ், பேரிடர் மீட்பு மையங்கள் செயல்பாடு, பராமரிப்பு சேவைகளை மேற் கொள்ளும் பொறுப்பு, ஐந்து நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இதற்காக 143.60 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
நடப்பு 2025 - 202 6ம் ஆண்டின் 15 வது நிதி ஆணையத்தின் கீழ், 74.10 லட்சம் ரூபாயில் 114 ஆயுஷ்மான் சுகாதார மையம் கட்ட ஒப்புதல் கிடைத்து உள்ளது. மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் திருத்த மசோதா - 2025 ஐ, பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. கிராம பஞ்சாயத்து, நகராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
போலி மருந்துகள், அழகுசாதன பொருட்களை விற்பனை செய்வோருக்கு விதிக்கப்படும் சிறை தண்டனையை, ஆயுள் தண்டனையாக நீட்டிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபற்றியும் விவாதம் நடந்தது.
இவ்வாறு கூறினார்.

