/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொள்ளை வழக்கில் கைதான பயிற்சி எஸ்.ஐ., பணி நீக்கம்
/
கொள்ளை வழக்கில் கைதான பயிற்சி எஸ்.ஐ., பணி நீக்கம்
கொள்ளை வழக்கில் கைதான பயிற்சி எஸ்.ஐ., பணி நீக்கம்
கொள்ளை வழக்கில் கைதான பயிற்சி எஸ்.ஐ., பணி நீக்கம்
ADDED : நவ 28, 2025 05:50 AM

தாவணகெரே: கொள்ளை வழக்கில் கைதான பயிற்சி எஸ்.ஐ.,யை பணி நீக்கம் செய்து, கிழக்கு மண்டல ஐ.ஜி., ரவிகாந்தேகவுடா உத்தரவிட்டு உள்ளார்.
கார்வாரை சேர்ந்தவர் விஸ்வநாத்; நகை வியாபாரி. கடந்த 22ம் தேதி வியாபார விஷயமாக தாவணகெரே வந்தார்.
மறுநாள் அதிகாலை ஊருக்கு செல்ல, பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ்சுக்குள் ஏறிய, பயிற்சி எஸ்.ஐ., மல்லப்பா சிப்பலகட்டி, போக்குவரத்து எஸ்.ஐ., பிரவீன் குமார் ஆகியோர், விஸ்வநாத்தை பஸ்சில் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர். விஸ்வநாத்திடம் இருந்து 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 78 கிராம் நகைகளை கொள்ளையடித்தனர். விஸ்வநாத் அளித்த புகாரில் மல்லப்பா, பிரவீன்குமார், நகைக்கடை உரிமையாளர்கள் 5 பேரை, கே.டி.ஜே.நகர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மல்லப்பாவை பணி நீக்கம் செய்தும், பிரவீன் குமாரை சஸ்பெண்ட் செய்தும், கிழக்கு மண்டல ஐ.ஜி., ரவிகாந்தேகவுடா நேற்று உத்தரவிட்டார். 'பொதுமக்களை பாதுகாக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, கொள்ளையடிப்பது கொடூரமான குற்றம்' என்றும், தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

