தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2 மகள்களை கொன்ற  வளர்ப்பு தந்தைக்கு 'ஆயுள்'

2 மகள்களை கொன்ற  வளர்ப்பு தந்தைக்கு 'ஆயுள்'

2 மகள்களை கொன்ற  வளர்ப்பு தந்தைக்கு 'ஆயுள்'


ADDED : ஏப் 07, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : தனது பேச்சை கேட்காததால், இரண்டு மகள்களை கத்தியால் குத்தி கொன்ற, வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் சுமித் மோகன், 33. பெங்களூரு அம்ருதஹள்ளியில் தங்கி இருந்து உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார்.

திருமண இணையதளம் மூலம் அறிமுகம் ஆன அனிதாவை, 35 திருமணம் செய்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. கணவரை பிரிந்து மகள்கள் சிருஷ்டி, 16, சோனியா, 14 ஆகியோருடன் வசித்தார்.

திருமணத்திற்கு பின் அம்ருதஹள்ளி காவேரி லே - அவுட்டில் வசித்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சிருஷ்டி, சோனியாவை கத்தியால் குத்தி சுமித் மோகன் கொலை செய்தார். அவர் கைது செய்யப்பட்டார். வளர்ப்பு தந்தையான தனது பேச்சை கேட்காததால், சிருஷ்டி, சோனியாவை கொன்றதை ஒப்பு கொண்டார்.

அவர் மீது பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி சந்தோஷ் தீர்ப்பு கூறினார்.

'சுமித் மோகன் மீதான இரட்டை கொலை குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகி உள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என்று நீதிபதி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us