தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'லைட்டர்' தகராறு: மரத்தில் காரை மோதச்செய்து நண்பரை கொன்ற வாலிபர்

 'லைட்டர்' தகராறு: மரத்தில் காரை மோதச்செய்து நண்பரை கொன்ற வாலிபர்

 'லைட்டர்' தகராறு: மரத்தில் காரை மோதச்செய்து நண்பரை கொன்ற வாலிபர்


ADDED : ஜன 27, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்ஜாபூர்: சிகரெட் பற்ற வைக்க லைட்டர் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில், மரத்தில் காரை மோதி வாலிபரை கொலை செய்த நண்பரும், படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு ஹெப்பகோடியை சேர்ந்தவர்கள் பிரசாந்த், 28, ரோஷன், 27. நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் மாலை, ஹெப்பகோடி அருகே கம்மசந்திரா பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில், ஒரே அணிக்காக இருவரும் விளையாடினர். போட்டி முடிந்ததும் இரவு இருவரும் காரில் வீட்டிற்கு சென்றனர்.

ரோஷன் காரை ஓட்டினார். அவரது பக்கத்து இருக்கையில் பிரசாந்த் அமர்ந்திருந்தார். திடீரென ரோஷனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த், சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோஷன் படுகாயத்து டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கார் விபத்து என்று போலீசார் விசாரணையை து வக்கினர்.

இந்நிலையில், பிரசாந்த் குடும்பத்தினர் ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், கார் விபத்தில் பிரசாந்த் இறக்கவில்லை. வேண்டும் என்றே மரத்தில் காரை மோதி அவர் கொலை செய்யப்பட்டதாக கூறியிருந்தனர். இந்த புகார் அடிப்படையில், நேற்று முன்தினம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, கிரிக்கெட் போட்டி முடிந்ததும், பிரசாந்த்தும், ரோஷனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும், பிரசாந்த்துக்கு சிகரெட் பற்ற வைக்க லைட்டர் கொடுக்க ரோஷன் மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரிந்தது. பின், அங்கிருந்து இருவரும் காரில் சென்ற போதும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கோபத்தில் மரத்தில் காரை மோதி பிரசாந்த்தை, ரோஷன் கொன்றதும் தெரியவந்துள்ளது. கார் வேகமாக சென்று மரத்தில் மோதும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us