/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின்சாரம் பாய்ந்து லைன்மேன் உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து லைன்மேன் உயிரிழப்பு
ADDED : ஜூலை 18, 2025 11:26 PM
சிக்கமகளூரு: மின்சாரம் பாய்ந்து, லைன்மேன் ஒருவர் உயிரிழந்தார்.
சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின் ஹொன்னேகொப்பா கிராமத்தில் வசித்தவர் பிரவீன், 26. இவர் மெஸ்காம் எனும் மங்களூரு மின்வினியோக நிறுவனத்தில் லைன்மேனாக பணியாற்றினார். ஒரு மாதத்துக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடந்தது.
கிராமத்தின் மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக நேற்று மதியம் பிரவீன், மின் கம்பத்தில் ஏறினார். பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில், கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, மற்ற ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார்.
பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், மின் கம்பத்தை பழுது நீக்க சென்றதே, அசம்பாவிதத்துக்கு காரணம் என, கூறப்படுகிறது.
பாளேஹொன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.