/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'வாட்ஸாப்' மூலம் வந்த 'லிங்க்' ரூ.2.65 லட்சம் சைபர் மோசடி
/
'வாட்ஸாப்' மூலம் வந்த 'லிங்க்' ரூ.2.65 லட்சம் சைபர் மோசடி
'வாட்ஸாப்' மூலம் வந்த 'லிங்க்' ரூ.2.65 லட்சம் சைபர் மோசடி
'வாட்ஸாப்' மூலம் வந்த 'லிங்க்' ரூ.2.65 லட்சம் சைபர் மோசடி
ADDED : ஆக 27, 2025 07:16 AM
பெங்களூரு :அடையாளம் தெரியாத 'வாட்ஸாப்' எண்ணில் இருந்து அனுப்பப்பட்ட செயலியை பதிவிறக்கம் செய்ததால், 50 வயது நபர், 2.65 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
பெங்களூரு, டெலிகாம் லே - அவுட்டில் வசிப்பவர் முரளி மோகன், 50. போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது குறித்து அறிவதற்காக, தன் மொபைல் போனில் இணையத்தில் தேடினார்.
சிறிது நேரம் கழித்து, அவரது 'வாட்ஸாப்'புக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து, போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கான செயலிக்கான 'லிங்க்' வந்தது.
இதை 'கிளிக்' செய்து அச்செயலியை மோகன் பதிவிறக்கம் செய்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 2.65 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதை பார்த்த மோகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் கூறியதாவது:
அடையாளம் தெரியாத எண்களில் இருந்து அனுப்பப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதால், மொபைல் போன் 'ஹேக்' செய்யப்பட்டு, பணம் பறிபோகும். போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை செலுத்த கே.எஸ்.பி., - பி.டி.பி., அஸ்ட்ரம் செயலிகள் உட்பட கர்நாடகா ஒன், பெங்களூரு ஒன் போன்ற அதிகாரப்பூர்வ இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.