ADDED : ஏப் 03, 2026 03:42 AM
கோலார்: கோலாரில் மருத்துவ கல்லுாரி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
கோலார் விஜயபுரா மாவட்டத்தில், மருத்துவ கல்லுாரி கட்டுவதற்கு, பட்ஜெட்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதனால், கோலாரில் அமைக்க உள்ள மருத்துவ கல்லுாரிக்கு இடம் தேர்வு செய்ய கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் , எம்.எல்.சி., அனில் குமார் ஆகியோர் முன்னிலையில், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் கூறியதாவது:
கோலாரின் புறநகர் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலக பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ம ருத்துவ கல்லுாரிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை, 15 நாட்களில் முடிக்க வருவாய் துறை, சுகாதார துறை, மருத்துவ துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பின்னர், அந்த திட்ட அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும். மூன்று மா தங்களில், முதற்கட்ட பணியை துவக்க வே ண்டும்.
மருத்துவ கல்லுாரிக்கான முதற்கட்ட பணியை நிறைவேற்றவே, 200 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. விரைவில் கோலாரில் அரசு மருத்துவ கல்லுாரி கட்டப்படும். ஏற்கனவே, கோலாரில் தனியார் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க திட்டமிடப் பட்டது.
ஆனால், அவர்கள் தேர்வு செய்த இடம் வனத்துறை பகுதிக்கு உட்பட்டதால் தடைபட்டது. எனவே, அவர்கள் வேறொரு இடத்தில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு கூட்டத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி சீனிவாசன், தாசில்தார் டாக்டர் நயனா, மாவட்ட வருவாய் துறை அதிகாரி ராஜேந்திர குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
