/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநிலம் முழுதும் நாளை முதல் 3 நாட்கள்...கடையடைப்பு!: ஜி.எஸ்.டி., கெடுபிடியால் சிறு வணிகர்கள் முடிவு
/
மாநிலம் முழுதும் நாளை முதல் 3 நாட்கள்...கடையடைப்பு!: ஜி.எஸ்.டி., கெடுபிடியால் சிறு வணிகர்கள் முடிவு
மாநிலம் முழுதும் நாளை முதல் 3 நாட்கள்...கடையடைப்பு!: ஜி.எஸ்.டி., கெடுபிடியால் சிறு வணிகர்கள் முடிவு
மாநிலம் முழுதும் நாளை முதல் 3 நாட்கள்...கடையடைப்பு!: ஜி.எஸ்.டி., கெடுபிடியால் சிறு வணிகர்கள் முடிவு
ADDED : ஜூலை 22, 2025 04:39 AM

பெங்களூரில் உள்ள பேக்கரி, பால், மளிகை, ஹோட்டல், ஜூஸ், சிகரெட், சலுான் உள்ளிட்ட கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள், கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கடைகளில் இருந்த கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்களை ஆய்வு செய்தனர். 2021 - 22; 2024 - 25ம் நிதியாண்டு வரை நடந்த பரிவர்த்தனைகளை கணக்கிட்டனர்.
-ஆத்திரம் ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்தவர்களுக்கும்; 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடந்த அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்டவை நடத்துவோருக்கும் ஜி.எஸ்.டி., செலுத்தும்படி, 14 ஆயிரம் வியாபாரிகளுக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் வழங்கியது.
பெரும்பா லானோருக்கு லட்சக்கணக்கிலான ரூபாய் வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால், வியாபாரிகள் அதிர்ச்சியு ம், கோபமும் அடைந்தனர்.
இதை கண்டித்து, நாளை முதல் 25ம் தேதி வரை மாநிலம் முழுதும் உள்ள கடைகள் மூடப்படும்; 25ம் தேதி கடைகளை மூடிவிட்டு சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என சிறு வணிகர்கள் அறிவித்தனர். போராட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே, நகரில் உள்ள பல வியாபாரிகள், தங்கள் கடைகளில் உள்ள கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்களை அகற்றி வருகின்றனர்.
பலரும் பணம் செலுத்தினால் மட்டுமே தங்கள் கடைகளில் பொருட்களை வாங்க முடியும் என பலகைகள் வைத்து வருகின்றனர். இதனால், வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், வரியிலிருந்து தப்பிக்க கியூ.ஆர்., ஸ்கேனர்களை அகற்றுகின்றனர். இது தேசிய அளவிலான செய்திகளில் இடம் பிடித்தது.
இதற்கு வணிக வரித்துறை அதிகாரிகள் எதிர்வினையாற்றும் வகையில், 'கூகுள் பே', 'போன் பே' உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளை பயன்படுத்தாவிட்டாலும், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வியாபாரம் செய்யும் பட்சத்தில், வரி விதிக்கப்படும். இது வரை ஜி.எஸ்.டி., பதிவு செய்யாதவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்பு இல்லை இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி., வரிக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜி.எஸ்.டி., மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், வணிக வரித்துறை அதிகாரிகளிடம் பேச்சு நடத்துவேன்” என்றார்.
அதே சமயம், வாக்குறுதித் திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மாநில அரசே வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக வியாபாரிகள் சங்கத்தினர், நகரில் உள்ள பல பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். வரும் 25ம் தேதி நடக்கும் போராட்டத்துக்கு, முழு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து கர்நாடக மாநில தொழிலாளர் கவுன்சில் தரப்பில் கூறியதாவது:
வரும் 23, 24 தேதிகளில் பால் கடைகள் முற்றிலுமா க இயங்காது. இதனால், பால் சார்ந்த பொருட்களின் விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்படும்.
அந்த இரண்டு நாட்களிலும் டீ கடைகளில், லெமன் டீ, பிளாக் டீ போன்ற பால் சேராத பொருட்களே கிடைக்கும். அவர்களும், கையில் கருப்பு பட்டை அணிந்து வியாபாரம் செய்வர்.
நீடிக்கும் வரும் 25ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பேக்கரி, காய்கறி, பழம், பூ, தேநீர், இறைச்சி, மளிகை கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என லட்சக்கணக்கிலானோர் கலந்து கொள்வர். வணிகர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தேவைப்பட்டால் கடையடைப்பு ஒரு வாரம் கூட நீடிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.