/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லோக் அதாலத் 58.67 லட்சம் வழக்குக்கு தீர்வு
/
லோக் அதாலத் 58.67 லட்சம் வழக்குக்கு தீர்வு
ADDED : ஜூலை 16, 2025 08:16 AM
பெங்களூரு : ''கர்நாடகாவில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 58.67 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன,'' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி காமேஸ்வர ராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் இம்மாதம் 12ம் தேதி தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. நிலுவையில் இருந்த 3.11 லட்சம் வழக்குகள் உட்பட மொத்தம் 58.67 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. 1,756 விவகாரத்து வழக்கில், 331 தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா முழுதும் 1,022 அமர்வுகள் போடப்பட்டன. கர்நாடக உயர் நீதிமன்றத்தில், 1,182 வழக்குகளும்; மாவட்டம், தாலுகா அளவில் 3.09 லட்சம் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

