தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹம்பி விடுதிகள் மீது லோக் ஆயுக்தா நீதிபதி வழக்கு

 ஹம்பி விடுதிகள் மீது லோக் ஆயுக்தா நீதிபதி வழக்கு

 ஹம்பி விடுதிகள் மீது லோக் ஆயுக்தா நீதிபதி வழக்கு


ADDED : ஆக 08, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயநகரா; ஹம்பியின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், சட்டவிரோத தங்கும் விடுதிகள் பல இயங்குகின்றன. இத்தகைய தங்கும் விடுதிகளுக்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது, உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா வழக்கு பதிவு செய்துள்ளார்.

உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, சமீபத்தில், உலக பிரசித்தி பெற்ற, விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில் உள்ள, ஹம்பிக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பல்வேறு இடங்களில், சட்ட விரோத தங்கும் விடுதிகள் இருப்பதை கவனித்தார். அந்த இடங்களில், சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும், அவரது கவனத்துக்கு வந்தது.

இதை தீவிரமாக கருதிய அவர், சட்ட விரோதமான தங்கும் விடுதிகளுக்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின்படி, 54 அதிகாரிகள் மீது தாமாக முன் வந்து, வழக்கு பதிவு செய்து கொண்டார்.

இது தொடர்பாக, ஹம்பி உலக பாரம்பரிய பகுதி நிர்வகிப்பு ஆணைய அதிகாரிகள், உதவி கமிஷனர், தாசில்தார், தாலுகா பஞ்சாயத்து செயல் நிர்வாக அதிகாரிகள் உட்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

உத்தரவில் நீதிபதி வீரப்பா கூறியதாவது:

ஹம்பி உலக பாரம்பரியமிக்க இடமாகும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், 200 சட்டவிரோத தங்கும் விடுதிகள் உள்ளன. ஹம்பி கோவில் அருகில் உள்ள ஜனதா காலனியில், 250 சட்டவிரோத தங்கும் விடுதிகள் உள்ளன.

கங்காவதியின் சுற்றுலா இடங்களில், போதைப்பொருள், மதுபானம் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. 'யுனெஸ்கோ' பட்டியலில் உள்ள, பாரம்பரியமான இடத்தில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் இயங்குகின்றன. இவற்றை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us