தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்கிரஸ் பிரமுகர் பட்டப்பகலில் கொலை

 காங்கிரஸ் பிரமுகர் பட்டப்பகலில் கொலை

 காங்கிரஸ் பிரமுகர் பட்டப்பகலில் கொலை


ADDED : ஆக 08, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுப்பி; காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை, மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுப்பி மாவட்டத்தின், முதரங்கடி கிராமத்தில் வசித்தவர் டேவிட் டிசோசா, 40. இவர் கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராவார். காங்கிரஸ் பிரமுகரான இவர், ஒப்பந்ததாரராக இருந்தார்.

இவர் நேற்று மதியம், வீட்டின் அருகில் செல்லும் போது, காரில் வந்த மர்ம கும்பல், அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியது. முன் விரோதம் காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த, சிர்வா போலீசார், உடலை மீட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.

சில நாட்களுக்கு முன், உடுப்பி மாவட்டம், குந்தாபுராவின், ஹோலி ரோஜாரியோ சர்ச் சாலையில் தொழிலதிபர் ஐவன் ரிச்சர்டு மஸ்கரேனஸ், 45, என்பவர் கொலை நடந்தது. இப்போது மற்றொரு கொலை நடந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us