ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்ற சர்வே பணிகள் லோக் ஆயுக்தா நீதிபதி அதிரடி உத்தரவு
ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்ற சர்வே பணிகள் லோக் ஆயுக்தா நீதிபதி அதிரடி உத்தரவு
ADDED : ஏப் 09, 2026 02:14 AM
- நமது நிருபர் --: ''கோலார் மாவட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,'' என்று லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ். பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை தாக்கல் கோலார் மாவட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்புகள், முறைகேடாக நிலப்பதிவுகள் செய்துள்ளதாக கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவிடம் பல புகார்கள் ஓராண்டுக்கு முன்பிருந்தே இருந்து வந்தன.
இதன் மீது லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட் டீல் ஏரிகள் குறித்து சர்வே மேற்கொள்ள வேண்டும்; ஆக்கிரமிப்பு விபர தகவல்களை விரைந்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து ஏரிகள் குறித்து மூன்று மாதங்களாகவே சர்வே பணிகளை மேற்கொண்டனர்.
இதன் விபரத்தை தெரிவிப்பதற்காக நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் தங்கவயல், கோலார், பங்கார்பேட்டை, முல்பாகல் தாலுகா வருவாய்த் துறை, சிறிய நீர்வளத்துறை அதிகாரிகள் நீதிபதி பி.எஸ்.பாட்டீல் முன் ஆஜராகினர். ஏரிகள் சர்வே குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர்.
தங்கவயல் தாலுகாவில் 325 ஏரிகள் உள்ளன. இதில் 200 ஏரிகளில் சர்வே பணிகள் நிறைவடைந்துள்ளன. 46 ஏரிகளை மறுசர்வே மேற்கொள்ள வேண்டும். மற்ற ஏரிகள் ஆய்வு பணிகள் நிலுவையில் உள்ளன.
ஆக்கிரமிப்பு அகற்ற முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. பங்கார்பேட்டை தாலுகாவில் 377 ஏரிகள் உள்ளன.
பெரும்பாலான ஏரிகளின் சர்வே பணிகள் முடிந்துள்ளன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சீனிவாசப்பூர் தாலுகாவில் 617 ஏரிகள் உள்ளன.
இதில் சிறு சிறு குளங்களும் உள்ளன. பல இடங்களில் வீடுகள் கட்டப் பட்டுள்ளன.
மேலும் பல ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. சில சம்பவங்களில், இவ்வகை ஆக்கிரமிப்புகள், அதிகாரப்பூர்வ பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோலார் தாலுகாவில் மட்டும் 566 ஏரிகள் அடையாளம் கா ணப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவற்றில் சர்வே பணிகள் முடிக்கப் பட்டிருந்தாலும், பல நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன.
பணியாளர் பற்றாக்குறை ச ட்டவிரோதமாக ஏரிப் பகுதிகளை ஆக்கிரமித்தல், சர்வே பணிகளில் தாமதம், நிர்வாக குறைபாடுகள் ஆகியவை நீர்நிலைகள் சேதமடைவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
சர்வே பணிகளை நிறைவு செய்வதிலும் வரைபடங்களை தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படுவதற்கு பணியாளர் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனை கேட்ட லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், ''நிலுவையில் உள்ள ஏரிகளை சர்வே செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
' 'எக்காரணம் கொண்டும் இதில் சமரசத்துக்கு இடம் கிடையாது.
' 'அரசு சொத்துகளை ஆக்கிரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று எச்சரித்தார்.
