sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஹாசன் விநாயகர் ஊர்வலத்தில் புகுந்தது லாரி: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

/

ஹாசன் விநாயகர் ஊர்வலத்தில் புகுந்தது லாரி: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

ஹாசன் விநாயகர் ஊர்வலத்தில் புகுந்தது லாரி: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

ஹாசன் விநாயகர் ஊர்வலத்தில் புகுந்தது லாரி: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு


ADDED : செப் 14, 2025 04:35 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: ஹாசன் அருகே, விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி புகுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 'உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, அரசுக்கு, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.

ஹாசன் மாவட்டம், சாந்திகிராமம் அருகே மொசலே ஒசஹள்ளி கிராமத்தில், ஹாசன் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலம் எந்த தடையும் இன்றி செல்வதற்கு வசதியாக, நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம், ஒரு வழியாக மாற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு ஹாசனில் இருந்து மைசூரு நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து, விநாயகர் சிலை ஊர்வலத்துக்குள் புகுந்தது.

லாரியின் டயரில் சிக்கி, இன்ஜினியரிங் மாணவர்கள் ஈஸ்வர், 17, கோகுல், 17, ராஜேஷ், 17, குமார், 25, சுரேஷ், 23, பிரவீன் குமார், 22, ஹாசன் ஹொளேநரசிபுராவின் கப்பினஹள்ளி கிராமத்தின் பிரவீன், 25, சித்ரதுர்காவின் மிதுன், 22, ஹாசன் பந்தரஹள்ளியின் பிரபாகர், 55, ஆகிய ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

வேகத்தடை அவர்கள், ஹாசன் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் புவனேஷ், 35, கைது செய்யப்பட்டார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய், நிவாரண தொகையாக அரசு அறிவித்தது.

நேற்று காலை விபத்து நடந்த இடத்திற்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் சென்றனர். அப்பகுதி மக்களிடம் விபத்து குறித்து, தகவல் பெற்றனர். தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும்; வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் நேரில் சந்தித்து, ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா நேற்று ஆறுதல் கூறினார். விபத்து நடந்த இடத்திற்கும் சென்றார். அவரிடமும், நிவாரண தொகையை அதிகமாக வழங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ரத்த மாதிரி பின், அவர் அளித்த பேட்டி:

இந்த விபத்து வீடியோவை பார்க்கும்போது எனக்கு சந்தேகம் வருகிறது. லாரி முதலில் பைக் மீது மோதியது. திடீரென வேகமாக கூட்டத்திற்கு புகுந்துள்ளது. லாரி டிரைவர் மது அருந்தி இருந்தாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேண்டுமென்றே லாரியை கொண்டு வந்ததாக சிலர் அவதுாறு பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலா ரூ.1 லட்சம் விபத்தில் படுகாயம் அடைந்து கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை, முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின், அவர் அளித்த பேட்டியில், ''துயர விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, ம.ஜ.த., கட்சி சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாய்; லேசான காயம் அடைந்தோருக்கு தலா 20,000 ரூபாய் வழங்குவோம். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண தொகையை அதிகரிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் முறையிடுவேன்,'' என்றார்.

எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு, முதல்வர் சித்தராமையா அளித்த பதில்:

இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எவ்வளவு கொடுத்தனர்?

இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குவது, மரணத்திற்கு சமமானது இல்லை. அவர்களின் ஆறுதலுக்காக வழங்கப்படுகிறது. லாரி டிரைவர் தவறால் விபத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கு அரசு எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ஹொளேநரசிபுராவின் சிவாயன கொப்பலு கிராமத்தின் சந்தன், 26, நேற்று இறந்தார். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.

தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

ஹாசன் விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'கர்நாடகாவின் ஹாசனில் நடந்த விபத்து மனதை பதற வைக்கிறது. இந்த துயரமான நேரத்தில் என் எண்ணங்கள், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் உள்ளன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும்; காயம் அடைந்தோருக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்' என பதிவிட்டு உள்ளார்.



பிறந்த நாள் அன்று இறந்த மிதுன்

விபத்தில் இறந்த இன்ஜினியரிங் மாணவர் மிதுன், 22, சித்ரதுர்காவின் கவிரங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் அவருக்கு பிறந்த நாள். காலையில் குடும்பத்தினரிடம் மொபைல் போனில் பேசினார். ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு வரும்படி, மிதுனை அவரது தந்தை நாகராஜ் அழைத்தார். நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, இரவில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளப்போவதாக மிதுன் கூறினார். ஆனால் இரவு விபத்தில் சிக்கி, பிறந்த நாள் அன்றே இறந்துவிட்டார்.








      Dinamalar
      Follow us