நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்கோட்: பாகல்கோட் மாவட்டம், பனஹட்டி தாலுகாவின் கே.ஹெச்.டி.சி., காலனியில் வசித்தவர் கார்த்திக் நாயக், 19. இவரும், இதே பகுதியில் வசித்த பவித்ரா, 19, என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர்.
ஏதோ ஒரு சிறு காரணத்தால், நேற்று முன்தினம் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடந்தது. அதன்பின் வீட்டுக்கு சென்ற பவித்ரா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலி இறந்த துயரம் தாங்காமல், கார்த்திக் நாயக்கும் நேற்று காலை ரபகவி பனஹட்டி தாலுகாவின், அஸ்கி கிராமத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

