தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நந்தி மலை சென்ற காதலர்கள் ஏமாற்றம்

 நந்தி மலை சென்ற காதலர்கள் ஏமாற்றம்

 நந்தி மலை சென்ற காதலர்கள் ஏமாற்றம்


ADDED : பிப் 15, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: பெங்களூருக்கு அருகேயுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் நந்தி மலையும் ஒன்று. சிக்கபல்லாபூரில் உள்ள நந்தி மலைக்கு பலரும் தங்கள் பைக்குகளில் பயணம் மேற்கொள்வர்.

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக காதலர் தினமான நேற்று, நந்திமலைக்கு காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை செல்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அறியாத சில காதல் ஜோடிகள் நேற்று காலையிலேயே வரத் தொடங்கி விட்டனர். இவர்களை மலைப்பாதையின் ஆரம்பத்திலேயே வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us