தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சாகும் வரை சிறை தண்டனை விதிக்கும் அதிகாரம் கீழ் நீதிமன்றங்களுக்கு இல்லை' 

 'சாகும் வரை சிறை தண்டனை விதிக்கும் அதிகாரம் கீழ் நீதிமன்றங்களுக்கு இல்லை' 

 'சாகும் வரை சிறை தண்டனை விதிக்கும் அதிகாரம் கீழ் நீதிமன்றங்களுக்கு இல்லை' 


ADDED : ஜன 27, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கும் அதிகாரம், கீழ் நீதிமன்றங்களுக்கு இல்லை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஷிவமொக்கா ஹொசமனே கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரேஷ். இவர், ஹொசநகரில் உள்ள மடத்தில் வேலை செய்தார். இந்த மடத்திற்கு அடிக்கடி வந்த பெண் பக்தை ஒருவர், ருத்ரேஷ் சரியாக வேலை செய்யவில்லை என்று, மடத்தின் நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

இதனால், கோபம் அடைந்த ருத்ரேஷ், அந்த பெண் பக்தையின் மூன்று வயது ஆண் குழந்தையை கடத்தி கொன்றார்.

இச்சம்பவம், 2017 ஏப்ரல் 10ம் தேதி நடந்தது. இந்த வழக்கில், 2017 நவம்பர் 27 ல் தீர்ப்பு வழங்கிய, ஷிவமொக்கா, 5வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், ருத்ரேஷுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதி சந்தோஷ் விசாரித்தார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நேற்று மனு மீது நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், 'அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அதாவது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களுக்கு மட்டுமே குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் உள்ளது. கீழ் நீதிமன்றங்களுக்கு இல்லை' என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us