/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓசூரிலிருந்து பெங்களூரு வருவோருக்கு அதிர்ஷ்டம் 10ல் பொம்மசந்திரா - ஆர்.வி.சாலை மெட்ரோ ரயில் துவக்கம்
/
ஓசூரிலிருந்து பெங்களூரு வருவோருக்கு அதிர்ஷ்டம் 10ல் பொம்மசந்திரா - ஆர்.வி.சாலை மெட்ரோ ரயில் துவக்கம்
ஓசூரிலிருந்து பெங்களூரு வருவோருக்கு அதிர்ஷ்டம் 10ல் பொம்மசந்திரா - ஆர்.வி.சாலை மெட்ரோ ரயில் துவக்கம்
ஓசூரிலிருந்து பெங்களூரு வருவோருக்கு அதிர்ஷ்டம் 10ல் பொம்மசந்திரா - ஆர்.வி.சாலை மெட்ரோ ரயில் துவக்கம்
ADDED : ஆக 04, 2025 05:23 AM

பெங்களூரு: தமிழகத்தில் இருந்து பெங்களூரு வருவோருக்கு பயன் உள்ளதாக அமையும் வகையில் கர்நாடகாவின் பொம்மசந்திரா - ஆர்.வி.சாலை வரையிலான மெட்ரோ ரயிலை, வரும் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
பெங்களூரில் உள்ள தெற்கு பகுதிகளை மெட்ரோ ரயில் வழியாக அடைய, 5,056 கோடி ரூபாய் செலவில் மஞ்சள் நிற பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை 19.15 கி.மீ., துாரம் கொண்டது. ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரை 16 மெட்ரோ நிலையங்கள் உள்ளன.
இதற்கான பணிகள் 2023ல் துவங்கின. இப்பாதையில் ரயில்கள் எப்போது இயங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், பெங்களூரு தெற்கு பகுதிகளை அடைவதற்கான பயண நேரம் 60 சதவீதம் குறையும்.
பிரதமர் துவக்கம் இந்நிலையில், மெட்ரோ ரயில் மஞ்சள் நிற பாதையில் வரும் 10ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்புமிக்க திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு வருகை தந்து பச்சை கொடி அசைத்து ரயில் சேவையை திறந்து வைக்கிறார். இதைஅடுத்து, பிரதமர் மோடி மெட்ரோ 3ம் கட்ட திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது பெங்களூரு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாதையில் 2026 மார்ச் மாதத்திற்குள் 15 ரயில்கள் இயக்கப்படும். அப்போது, மஞ்சள் பாதையில் மட்டுமே தினமும் இரண்டு லட்சம் பயணியர் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெங்களூரு மெட்ரோ ரயிலில் தினமும் பயணிப்போர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.
20 கி.மீ., இந்த ரயில், தமிழகத்தில் இருந்து பெங்களூரு வருவோருக்கு பயன் உள்ளதாக அமையும். ஓசூரில் இருந்து வாகனங்கள், பஸ்களில் பெங்களூரு வருவோர், 20 கி.மீ., துாரத்தில் உள்ள பொம்மசந்திராவில் இறங்கி, அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி, பெங்களூரை அடையலாம். தினசரி வேலைக்காக, ஓசூரில் இருந்து பெங்களூரு வருவோர் பல மணி நேர போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பலாம்.
இது பற்றி பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.