காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி 4 ஜாம பூஜைகள்
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி 4 ஜாம பூஜைகள்
ADDED : பிப் 14, 2026 04:57 AM
சிவாஜிநகர்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பெங்களூரின், திம்மையா சாலையில் உள்ள காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், நான்கு ஜாம பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பிப்., 15ம் தேதியன்று, மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கும், ஸ்ரீ காசி விசாலாட்சிக்கும் ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
இரவு 10:00 மணிக்கு ருத்ராபிஷேகம், அலங்காரம் நடக்கும். ஸ்ரீ ருத்ர திரிசிதி அர்ச்சனை, அஷ்டவதான சேவை நடைபெறும். பிப்., 16ம் தேதியன்று அதிகாலை 1:30 மணிக்கு. ருத்ராபிஷேகம், அலங்காரம், சிவ சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். அஷ்டவதான சேவையும் உண்டு.
அதிகாலை 4:00 மணிக்கு, காசி விஸ்வநாதருக்கு, ருத்ராபிஷேகம், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை, அலங்காரம், அஷ்டவதன சேவை செய்யப்படும். ஒவ்வொரு ஜாம பூஜையிலும் மஹா மங்களாரத்திக்கு பின் பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்யப்படும்.
பூஜைகளில், பெருமளவில் பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
