/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.இ.ஜி., ராணுவ வளாக சிவன் கோவிலில் மஹா சிவராத்திரி
/
எம்.இ.ஜி., ராணுவ வளாக சிவன் கோவிலில் மஹா சிவராத்திரி
எம்.இ.ஜி., ராணுவ வளாக சிவன் கோவிலில் மஹா சிவராத்திரி
எம்.இ.ஜி., ராணுவ வளாக சிவன் கோவிலில் மஹா சிவராத்திரி
ADDED : பிப் 15, 2026 06:27 AM
ஹலசூரு: ஹலசூரு ஏரி அருகேயுள்ள எம்.இ.ஜி., எனும், மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் ராணுவ மைய வளாகத்தில் உள்ள, 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
ஹலசூரு ஏரி அருகில் உள்ள எம்.இ.ஜி., எனும் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் ராணுவ மைய வளாகத்தில், 500 ஆண்டுகள் பழமையான உதாசின் மடத்திற்கு உட்பட்ட சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுதும் சிவபெருமானை நம் கைகளால் தொட்டு வணங்கலாம்.
இன்று காலை 4:30 மணியில் இருந்து நாளை, 16ம் தேதி காலை 6:00 மணி வரை சிறப்பு வழிபாடு நடக்கிறது. ராணுவத்துக்கு உட்பட்ட வளாகத்தில் கோவில் அமைந்து உள்ளதால், இங்கு வருவோர், தங்களின் ஆதார் அடையாள அட்டை அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்.
சுவாமி தரிசன ஏற்பாடுகளை, உதாசின் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ பாலயோகி மகராஜ் செய்துள்ளார்.

