/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டாக்சி டிரைவரை பயங்கரவாதி என கூறிய மலையாள நடிகர் கைது
/
டாக்சி டிரைவரை பயங்கரவாதி என கூறிய மலையாள நடிகர் கைது
டாக்சி டிரைவரை பயங்கரவாதி என கூறிய மலையாள நடிகர் கைது
டாக்சி டிரைவரை பயங்கரவாதி என கூறிய மலையாள நடிகர் கைது
ADDED : அக் 11, 2025 11:01 PM

மங்களூரு: வாடகை கார் டிரைவரை பயங்கரவாதி என கூறிய, மலையாள நடிகர் ஜெயகிருஷ்ணன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயகிருஷ்ணன், 51. பல மலையாள படங்கள், சீரியல்களில் நடித்திருக்கிறார். கடந்த 9ம் தேதி தன் நண்பர்களான சந்தோஷ் ஆபிரஹாம், விமல் ஆகியோருடன், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மங்களூருக்கு சுற்றுலா வந்தார்.
அன்றைய தினம் இரவு ஹோட்டலில் இருந்து வெளியே செல்ல, 'ஊபர்' வாடகை காரை ஜெயகிருஷ்ணன் முன்பதிவு செய்தார். டிரைவர் ஷபிக், ஹோட்டல் முன் வந்து போன் செய்தார். ஹிந்தி, மலையாளத்தில் ஜெயகிருஷ்ணனும், அவரது நண்பர்களும் ஷபிக்கிடம் பேசினர்.
அப்போது ஷபிக்கிடம், 'நீ பயங்கரவாதி' என்று கூறியதுடன், அவரது தாயை பற்றி, ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. பின், கார் முன்பதிவை ரத்து செய்தனர். இதுபற்றி ஷபிக் அளித்த புகாரில், உருவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
நேற்று மதியம் உருவா பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்த ஜெயகிருஷ்ணன், சந்தோஷ் ஆபிரஹாம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, குடிபோதையில் ஷபிக்கை பயங்கரவாதி என்று கூறியதை ஒப்புக் கொண்டனர்.