தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ''மல்லிகார்ஜுன கார்கேவால் முதல்வராக முடியவில்லையே''

''மல்லிகார்ஜுன கார்கேவால் முதல்வராக முடியவில்லையே''

''மல்லிகார்ஜுன கார்கேவால் முதல்வராக முடியவில்லையே''


ADDED : மே 02, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கட்சி வளர்ச்சிக்கு, பெரும்பங்கை அளித்தும் கூட, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவால் முதல்வராக முடியவில்லையே,'' என உணவுத்துறை அமைச்சர் முனியப்பா அங்கலாய்தார்.

பெங்களூரின், அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்த தொழிலாளர்கள் தினம் நிகழ்ச்சியில், அமைச்சர் முனியப்பா பேசியதாவது:

கட்சியின் வளர்ச்சிக்காக, மல்லிகார்ஜுன கார்கே எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியவர். கட்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்தும், அவரால் ஒரு முறை கூட, முதல்வராக முடியவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, கல்வி அளித்து முன்னணிக்கு கொண்டு வரட்டும். நாட்டை வழி நடத்தும் சக்தி, அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

ஜெகஜீவன் ராவ் தொடர்ந்து எட்டு முறை எம்.பி.,யாக இருந்தவர். எவ்வளவோ சிறப்பாக பணியாற்றியும், அவரால் பிரதமராக முடியவில்லை. அதே போன்று மல்லிகார்ஜுன கார்கேவால், முதல்வராக முடியவில்லை.

எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினர் காங்கிரசுக்கு ஆதரவாக நின்றுள்ளனர். இவர்களின் வளர்ச்சிக்காக அரசு பணியாற்றுகிறது. மாநில அரசு துப்புரவு தொழலாளர்களின் பிள்ளைகளுக்கு, உறைவிட பள்ளி அமைக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்கள், தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் 9,000 குப்பை வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள், ஆப்பரேட்டர்களின் பணி நிரந்தரமாக்கப்படும் என, முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார்.

ஒப்பந்ததாரர்கள், துப்புரவு தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். நியாயமான ஊதியம் வழங்குவது இல்லை. இதை மனதில் கொண்டு, அவர்களின் பணியை அரசு நிரந்தரமாக்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us