/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில அரசியலில் மல்லிகார்ஜுன கார்கே? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆதரவு
/
மாநில அரசியலில் மல்லிகார்ஜுன கார்கே? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆதரவு
மாநில அரசியலில் மல்லிகார்ஜுன கார்கே? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆதரவு
மாநில அரசியலில் மல்லிகார்ஜுன கார்கே? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆதரவு
ADDED : ஜூலை 30, 2025 08:56 AM

பெங்களூரு : ''மல்லிகார்ஜுன கார்கே, மாநில அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
விஜயபுராவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனக்கு முதல்வர் பதவி கிடைக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பாக, பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று அளித்த பேட்டி:
மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, தேசிய அளவிலான மூத்த அரசியல் தலைவர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கார்கே, மாநில அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. அவரை விமர்சிப்பது சரியல்ல.
அவர் அனைத்து பதவிகளுக்கும் தகுதியானவர். 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்தவர். அவரின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை அவரை பற்றி பேசியவர்கள், அவரது நிலையை எட்டவில்லை.
முதல்வர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் தொகுதி வாரியாக என்னென்ன மேம்பாட்டுப் பணிகளை செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்கப்படும்.
புதிதல்ல எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு, 50 கோடி ரூபாய் வழங்க முதல்வர் முடிவு செய்துள்ளார். அது தொடர்பாக, இன்று முதல் ஆக., 1ம் தேதி வரை முதல்வர் சித்தராமையா ஆலோசனை கூட்டம் நடத்துவார். மற்ற மேம்பாட்டுப் பணிகள், கட்சி அமைப்பு குறித்து பேசுவது புதிதல்ல. 2013 முதல் 2018 வரை, கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
அப்போது நான் தலைவராக இருந்தேன். அனைத்து எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னைகளையும் நாங்கள் கேட்டறிந்தோம். ஐந்து ஆண்டு காலத்தின் முக்கிய இடத்தில் இருக்கிறோம். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் தொகுதி வாரியாக என்னென்ன மேம்பாட்டுப் பணிகளை செய்ய முடியும் என்பது குறித்து விவாதிப்போம். கூட்டம் நடத்துவது குறித்து கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பி உள்ளோம். தேர்தலின்போது மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டாமா? முதல்வர் எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்து கேட்பதில் என்ன தவறு உள்ளது?
பின்னடைவல்ல சின்னசாமி கிரிக்கெட் மைதான சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அளித்த அறிக்கை குறித்து, அமைச்சரவை விவாதித்தது. விவாதத்துக்கு பின், முடிவெடுக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மீதான சஸ்பெண்டை வாபஸ் பெற்று, விசாரணையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளில் ஒருவர், சி.ஏ.டி., எனும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்றதால், அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்படவில்லை. சி.ஏ.டி.,யிடம் இருந்து உத்தரவை வாபஸ் பெற எங்களுக்கு உத்தரவு கிடைத்தால், மற்ற அதிகாரிகள் போன்று, நாங்கள் பரிசீலிப்போம். சஸ்பெண்டை வாபஸ் பெற்றதால், என்ன பின்னடைவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.