தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாய், தந்தை, தங்கையை கொலை செய்து விட்டு காணாமல் போனதாக புகார் அளிக்க வந்தவர் கைது

 தாய், தந்தை, தங்கையை கொலை செய்து விட்டு காணாமல் போனதாக புகார் அளிக்க வந்தவர் கைது

 தாய், தந்தை, தங்கையை கொலை செய்து விட்டு காணாமல் போனதாக புகார் அளிக்க வந்தவர் கைது


ADDED : ஜன 31, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திலக் நகர்: தாய், தந்தை மற்றும் தங்கையை கொலை செய்து விட்டு, காணாமல் போனதாக புகார் அளிக்க வந்த நபர், போலீசாரிடம் சிக்கினார்.

சித்ரதுர்கா மாவட்டம், சிக்கநாயகனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய் குமார், 28. இவரது தந்தை பீமராஜ், 58. தாய் ஜெயலட்சுமி, 55. தங்கை அம்ருதா, 25. இவர்களின் குடும்பத்தினர் பிழைப்பு தேடி, பல ஆண்டுகளுக்கு முன், விஜயநகரா மாவட்டம் கொட்டூருக்கு சென்று வாடகை வீட்டில் வசித்தனர்.

இதய நோய் சிகிச்சை இந்நிலையில் நேற்று மதியம், பெங்களூரின் திலக் நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அக்ஷய்குமார், 'என் தந்தைக்கு இதயம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற, விஜயநகராவின் கொட்டூரில் இருந்து பெங்களூரு வந்தோம். வந்த இடத்தில் என் தந்தை, தாய், தங்கை திடீரென காணாமல் போய் விட்டனர்' என்று புகார் அளித்தார்.

போலீசார், 'எப்போது வந்தீர்கள். எந்த இடத்தில் இருந்து உங்களின் குடும்பத்தினர் காணாமல் போயினர்' என, கேள்வி எழுப்பினர். அதற்கு அக்ஷய் குமார், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார், அவரை தீவிரமாக விசாரித்த போது, தாய், தந்தை, சகோதரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தங்கை அம்ருதா, ஒருவரை காதலித்தார். இது, அண்ணனான அக்ஷய்குமாருக்கு பிடிக்கவில்லை. ஆனால், மகளின் காதலுக்கு பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் தினமும் தகராறு நடந்துள்ளது. ஜனவரி, 26ம் தேதி இரவு, தாய், தந்தை, தங்கையை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் அக் ஷய்குமார் கொலை செய்துள்ளார். இரவோடு இரவாக அங்கிருந்து தப்பி பெங்களூரு வந்துள்ளார்.

கொலை வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கில், போலீஸ் நிலையத்துக்கு வந்து குடும்பத்தினர் காணாமல் போனதாக நாடகமாடியது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் புதைப்பு தாய், தந்தை, தங்கை ஆகிய மூவரின் உடல்களையும், கொட்டூரில் உள்ள வீட்டிலேயே புதைத்ததாக கூறினார். மற்றொரு முறை சண்டூரில் வீசியதாக கூறுகிறார். இவரது பேச்சு குழப்பமாக உள்ளது. மூன்று கொலைகள் நடந்துள்ளது குறித்து விஜயநகரா போலீசாருக்கு, திலக் நகர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் பெங்களூருக்கு வந்த பின், அக்ஷய்குமாரை ஒப்படைக்க உள்ளனர்.

திலக்நகர் போலீசார் கூறுகையில், 'கொலையாளியை நாங்கள் கைது செய்துள்ளோம். தற்போது விஜயநகரா போலீசார், கொட்டூருக்கு சென்று கொலையான மூவரின் உடல்களை தேடுகின்றனர். அக்ஷய் குமார் தெளிவாக எதையும் கூறவில்லை. உடல்களை மீட்டு விசாரணை செய்த பின்னரே, கொலைக்கான முழு காரணமும் தெளிவாக தெரியும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us