/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆதரவற்ற இளம் பெண்களுக்கு 'குறி'வைத்தவர் மீண்டும் கைது
/
ஆதரவற்ற இளம் பெண்களுக்கு 'குறி'வைத்தவர் மீண்டும் கைது
ஆதரவற்ற இளம் பெண்களுக்கு 'குறி'வைத்தவர் மீண்டும் கைது
ஆதரவற்ற இளம் பெண்களுக்கு 'குறி'வைத்தவர் மீண்டும் கைது
ADDED : ஆக 31, 2025 06:13 AM

பெங்களூரு: ஆதரவற்ற இளம்பெண்களை திருமணம் செய்து தங்க நகைகள், பணத்துடன் கம்பி நீட்டுவதை வழக்கமாக வைத்திருந்த வாலிபரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
பெங்களூரின் பட்டேகாரபாளையாவில் வசிப்பவர் மிதுன் குமார், 30. இவர் இளம்பெண்களை திருமணம் செய்து, ஆறு மாதங்கள் ஒழுங்காக குடும்பம் நடத்துவார். அதன்பின் மனைவியின் பணம், தங்க நகைகளை திருடிக்கொண்டு இரவோடு இரவாக தப்பிவிடுவார்.
காமாட்சி பாளையாவில் வசிக்கும் இளம்பெண்ணுக்கு, காதல் வலை விரித்து சிக்க வைத்தார். தி
ருமணம் செய்து, பணம், நகைகளுடன் தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, விசாரணை நடத்திய காமாட்சி பாளையா போலீசார், மிதுன் குமாரை கைது செய்தனர்.
ஆறு மாதங்கள் சிறையில் இருந்த இவர், ஜாமினில் வெளியே வந்தார். அப்போதும் திருந்தாத இவர், ஓராண்டுக்கு முன்பு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நான்கு மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, நகைகள், பணத்துடன் ஓடினார்.
இதுகுறித்து, இளம்பெண் போலீசாரிடம் புகார் செய்தார். தலைமறைவாக இருந்த மிதுன்குமாரை, நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, ஏற்கனவே பல பெண்களை இது போன்று திருமணம் பெயரில் மோசடி செய்தது தெரிந்தது. தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற இளம் பெண்களையே, மிதுன் குமார் குறிவைத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது.

