/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடுரோட்டில் 'ரீல்ஸ்' செய்தவர் கைது
/
நடுரோட்டில் 'ரீல்ஸ்' செய்தவர் கைது
ADDED : ஏப் 19, 2025 05:28 AM

எஸ்.ஜே., பார்க்: நடுரோட்டில் வீல் சேரில் அமர்ந்து கொண்டு 'ரீல்ஸ்' செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது செயயப்பட்டார்.
பெங்களூரில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றான எஸ்.ஜே., பார்க் சாலையில், கடந்த 12ம் தேதி வாலிபர் ஒருவர், நடுரோட்டில் வீல் சேரில் அமர்ந்து கொண்டு டீ குடிப்பது போன்று 'ரீல்ஸ்' வெளியிட்டார்.
இந்த வீடியோவில், நடுரோட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் அவரின் இரு பக்கங்களிலும், ஆட்டோ, பைக்குகள் என வாகனங்கள் வேகமாக செல்கின்றன. ஆனால், அவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், போக்குவரத்துக்கு இடையூறு செய்து, கால் மேல் கால் போட்டபடி, கெத்தாக டீ குடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதை அறிந்த எஸ்.ஜே., பார்க் போலீஸ் நிலைய போலீசார், அந்த நபர் குறித்து விசாரித்து வந்தனர். இதில் அவர், நந்தினி லே- அவுட் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற சிம்பு, 25, என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.
'பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பெங்களூரு சிட்டி போலீஸ், தன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.

