தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பல்லக்கு மஹோத்சவத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

 பல்லக்கு மஹோத்சவத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

 பல்லக்கு மஹோத்சவத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது


ADDED : பிப் 24, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: எல்புர்காவில் அட்டபல்லக்கு மஹோத்சவம் துவங்கும்போது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டார் .

கொப்பால் மாவட்டம் எல்புர்கா டவுனில், ஜனவரி 28ல் அட்ட பல்லக்கு மஹோத்சவம் நடந்தது. இவ்விழாவுக்கு, விஜயபுரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பசனகவுடா பாட்டீலும் வந்திருந்தார்.

மஹோத்சவம் துவங்கியதும், பசனகவுடா பாட்டீல், தான் வைத்திருந்த ரிவால்வர் மூலம், வானத்தை நோக்கி சுட்டார்.

அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

இதையடுத்து, கொப்பால் மா வட்டத்தில் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பிரிவினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்ட பசனகவுடா பாட்டீலை கைது செய்த எல்புர்கா போலீசார், அவரிடம் இருந்து ரிவால்வர், ஆறு தோட்டக்களை பறிமுதல் செய்தனர்.

மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் யாராவது நடந்து கொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us