தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டவிரோதமாக அதிக விலைக்கு காஸ் சிலிண்டர் விற்றவர் கைது

 சட்டவிரோதமாக அதிக விலைக்கு காஸ் சிலிண்டர் விற்றவர் கைது

 சட்டவிரோதமாக அதிக விலைக்கு காஸ் சிலிண்டர் விற்றவர் கைது


ADDED : ஏப் 01, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லாரி: சட்டவிரோதமாக அதிக விலைக்கு காஸ் சிலிண்டர் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்பது சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்காசியாவில் நடக்கும் போரால், சமையல், வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதை பயன்படுத்தி, சிலர் காஸ் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்படும் என, மாநில அரசு அறிவித்து உள்ளது.

இருப்பினும், சிலர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பனை செய்கின்றனர்.

இவ்வகையில், பல்லாரி மாவட்டம் கவுதம நகரில் சட்டவிரோதமாக சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று கவுதம நகரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பல்லாரி ரூரல் போலீசாருடன் சேர்ந்து சோதனை செய்தனர். போலீசார் சிவில் உடையில் சென்றனர்.

அப்போது, சட்டவிரோதமாக சிலிண்டர் விற்பனை செய்யும் கணமூர்த்தியிடம், சிலிண்டர் வாங்க வந்த வாடிக்கையாளர் போல போலீசார் நடித்தனர்.

அப்போது, கணமூர்த்தி ஒரு சிலிண்டரின் விலை 3,000 ரூபாய் என்று கூறினார். இதையடுத்து, அந்த இடத்தில் சிவில் உடையில் சென்ற போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவரிடமிருந்த 5 வர்த்தக மற்றும் நான்கு வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us