/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியுடன் கள்ளத்தொடர்பு நண்பரை கொன்றவர் கைது
/
மனைவியுடன் கள்ளத்தொடர்பு நண்பரை கொன்றவர் கைது
ADDED : ஜூலை 10, 2025 03:56 AM
கலபுரகி: கலபுரகி மாவட்டம், கமலாபுரா தாலுகாவின், முரடி கிராமத்தில் வசிப்பவர் அஜய், 29. இவரது நண்பர் அம்பரிஷ், 28, இருவரும் நெருக்கமான நண்பர்கள். பெங்களூரில் வசிக்கும் அம்பரிஷ், அவ்வப்போது நண்பரை பார்க்க கலபுரகிக்கு வந்து செல்வார். அப்போது அஜயின் மனைவியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இது வெளிச்சத்துக்கு வந்ததால், கணவரை பிரிந்து மனைவி சென்றுவிட்டார்.
இது, அஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனக்கு துரோகம் செய்த நண்பர் அம்பரிஷை பழிவாங்க முடிவு செய்தார். பெங்களூருக்கு சென்று அவரை சந்தித்து, 'என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டார். நீ சொல்வதை கேட்பார். நீ கலபுரகிக்கு வந்து என் மனைவிக்கு புத்திமதி கூறி, என்னோடு வாழும்படி செய்' எனக் கூறி நேற்று முன் தினம் இரவு, முரடி கிராமத்தில் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அங்கு ஒயரால் அம்பரிஷின் கழுத்தை நெரித்து கொலை செய்த அஜய், நரோனா போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்ததை கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.