தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/திருமணத்திற்கு வற்புறுத்தியதால் 3வது மாடியிலிருந்து காதலியை கீழே தள்ளி கொலை செய்த காதலன் கைது

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் 3வது மாடியிலிருந்து காதலியை கீழே தள்ளி கொலை செய்த காதலன் கைது

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் 3வது மாடியிலிருந்து காதலியை கீழே தள்ளி கொலை செய்த காதலன் கைது


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 08:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கங்கமனகுடி: திருமணத்திற்கு வற்புறுத்தியதால், லாட்ஜின் 3வது மாடியில் இருந்து, காதலியை கீழே தள்ளி கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாசனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 23. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். தன்னுடன் வேலை செய்த பெங்களூரின் அப்பிகெரேயை சேர்ந்த சந்தோஷ், 26, என்பவரை காதலித்தார்.

இருவரின் காதல் விவகாரம் மூன்று ஆண்டுக்கு முன், ஐஸ்வர்யா குடும்பத்திற்கு தெரிந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மகளுக்காக சம்மதம் தெரிவித்து, சந்தோஷுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்பு கொண்டனர்.

திருமணத்திற்கு தனக்கு மூன்று ஆண்டுகள் வேண்டும் என்று, சந்தோஷ் கேட்டார். ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், காதலியை திருமணம் செய்யாமல் இழுத்தடித்தார்.

கடந்த மாதம் காதலியிடம் சென்று, ‘உன்னை திருமணம் செய்ய மாட்டேன். திருமணத்திற்கு வற்புறுத்தினால் உனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பெற்றோரிடம் ,ஐஸ்வர்யா கூறினார். இரு குடும்பத்தினர் இடையே பேச்சு நடந்தது.

காதலியை திருமணம் செய்ய, சந்தோஷ் ஒப்பு கொண்டார். ஆனால் சில தினங்களாக மீண்டும், காதல் ஜோடி இடையே பிரச்னை ஏற்பட்டது.

கடந்த 19ம் தேதி அப்பிகெரே சதுக்கத்தில் உள்ள லாட்ஜில் 3வது மாடியில் உள்ள அறையில், ஐஸ்வர்யாவும், சந்தோஷும் அறை எடுத்து தங்கினர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா, சந்தோஷிடம் வற்புறுத்தி உள்ளார்.

கோபம் அடைந்த காதலன், காதலியை லாட்ஜ் அறையின் ஜன்னல் வழியாக பிடித்து தள்ளினார். கீழே விழுந்த ஐஸ்வர்யா மின்கம்பத்தில் மோதி, படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த, 21ம் தேதி உயிரிழந்தார்.

கங்கமனகுடி போலீசார், சந்தோஷிடம் விசாரணை நடத்திய போது, ஐஸ்வர்யாவை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொன்றதை ஒப்பு கொண்டார். நேற்று அவர் கைது செய்யப்பட் டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us