தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஒயிட்பீல்டு ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை இலவச கன்னட வகுப்பு துவக்க விழா

ஒயிட்பீல்டு ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை இலவச கன்னட வகுப்பு துவக்க விழா

ஒயிட்பீல்டு ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை இலவச கன்னட வகுப்பு துவக்க விழா


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 08:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒயிட்பீல்டு: பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை நடத்தும் இலவச கன்னட வகுப்பு துவக்க விழாவில் ஏராளமானோர் ஆர்வமாக பங்கேற்றனர்.

ஸ்ரீ சரஸ்வதி கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், பெங்களூரில் வசிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட பிற மாநிலத்தவர்கள் பங்கேற்றனர். அறிமுக வகுப்பில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

ஒயிட்பீல்டில் வசிக்கும் சுஷ்மா சங்கர் எளிமையான முறையில் கன்னடம் படிப்பது குறித்து கற்பித்தார். இவர், சரஸ்வதி கல்வி அறக்கட்டளை மூலம், கடந்த 18 ஆண்டுகளாக கன்னடம் கற்றுத்தருகிறார். மேலும், திராவிட மொழிபெயர்ப்பாளர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் உள்ளார்.

பேராசிரியர் ராகேஷ் வரவேற்புரை, விழா ஒருங்கிணைப்பாளர் ரெபீன் ரவீந்திரன் நன்றியுரை வழங்கினர். இந்த வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு, வயது அடிப்படையில் தனித்தனி வகுப்புகள் வருங்காலத்தில் நடக்க உள்ளன. இந்த வகுப்பு குறித்த மேலதிக தகவல்களுக்கு 99010 41889, 81472 12724, 97428 53241 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us