தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது

 வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது

 வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது


ADDED : ஏப் 21, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: வேட்டையாடுவது குறித்து, தகவல் கொடுத்தவரை கொலை செய்த நபர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவின் குனகள்ளி கிராமத்தில் வசித்தவர் விவசாயி ராமகிருஷ்ணா, 45. இதே கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா, 45. இவர் கிராமத்தின் வனப்பகுதியில், விலங்குகளை வேட்டையாடுவார். இதற்காக சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தார்.

இது குறித்து, ராமகிருஷ்ணா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் மல்லிகார்ஜனா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதன்பின்னரும் வேட்டையாடுவதை அவர் நிறுத்தவில்லை. இதையறிந்த ராமகிருஷ்ணா மீண்டும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தன்னை பற்றி அவ்வப்போது போலீசாருக்கு தகவல் கொடுப்பது, ராமகிருஷ்ணா தான் என்பதை தெரிந்து கொண்டு, இவரை தீர்த்து கட்ட மல்லிகார்ஜுனா திட்டம் தீட்டினார்.

சரியான நேரத்துக்காக காத்திருந்தார். நேற்று மதியம், விவசாய பணிகள் முடிந்து, வீடு திரும்பிய ராமகிருஷ்ணாவை, பார்ட்டி நடத்தலாம் என, நம்ப வைத்து அழைத்து சென்றார்.

கிராமத்தின் புறநகரில், அவரை அதிகமாக குடிக்க வைத்தார். அதன்பின் தன்னை பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தது குறித்து, கேள்வி எழுப்பினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மல்லிகார்ஜுனா, இரும்புத்தடியால் ராமகிருஷ்ணாவை சரமாரியாக தாக்கினார். இரண்டு மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்த மல்லிகார்ஜுனா, அதன்பின் மாம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்ததை கூறி சரண் அடைந்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, ராமகிருஷ்ணா இறந்துவிட்டது தெரிந்தது. உடலை மீட்ட போலீசார், கொலையாளியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us