தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்து விற்றவர் கைது 7 துப்பாக்கிகள் பறிமுதல்

 வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்து விற்றவர் கைது 7 துப்பாக்கிகள் பறிமுதல்

 வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்து விற்றவர் கைது 7 துப்பாக்கிகள் பறிமுதல்


ADDED : பிப் 07, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: தன் வீட்டையே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றியிருந்த முதியவரை, போலீசார் கைது செய்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகா, பத்ராபுரா கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணப்பா, 67. இவர் தச்சு வேலை செய்கிறார். அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், தன் வீட்டிலேயே நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்று வந்தார். பல நாட்களாக யாருக்கும் சந்தேகம் வராமல், அவர் இந்த வேலையை செய்துள்ளார்.

இதை எப்படியோ அறிந்த கிராமத்தினர், ஷிகாரிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

நேற்று அதிகாலை கிராமத்துக்கு வந்த போலீசார், லட்சுமணப்பாவின் வீட்டில் சோதனை நடத்திய போது, தன் வீட்டையே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையாக, அவர் மாற்றியிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்டர் கொடுத்தவர்களுக்கு சப்ளை செய்வதற்காக, அவர் தயாரித்து வைத்திருந்த ஏழு துப்பாக்கிகள், ரம்பம், சுத்தியல் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர் யார் யாருக்கு துப்பாக்கி சப்ளை செய்தார் என்பது குறித்து, போலீசார் தகவல் சேகரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us