/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு ரயிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
/
பெங்களூரு ரயிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பெங்களூரு ரயிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பெங்களூரு ரயிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : மே 11, 2025 11:23 PM

கலபுரகி: புதுடில்லியில் இருந்து பெங்களூரு வந்து கொண்டிருந்த கர்நாடகா விரைவு ரயிலில், வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த பயணியை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனால் சில மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது.
புதுடில்லியில் இருந்து பெங்களூருக்கு கர்நாடகா விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 1:00 மணி அளவில், ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், கர்நாடகா விரைவு ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகவும், எந்நேரத்திலும் வெடிக்கும் என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார். அழைப்பு வந்த எண்ணை ரயில்வே போலீசார் தொடர்பு கொள்ள நினைத்தபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
பயணியர் பரபரப்பு
உடனடியாக, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 1:30 மணிக்கு கலபுரகியின் வாடி நிலையத்துக்கு ரயில் வந்தபோது, அதிகாரிகள் நிறுத்தினர். 22 பெட்டிகளில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான பயணியர், ரயிலில் இருந்து கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு பெட்டியாக ஏறி, சோதனை நடத்தப்பட்டது. பயணியர் உட்பட ரயில் நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது. இச்சோதனையில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.
பின், அழைப்பு வந்த எண்ணை, 'ட்ரூ காலர்' மூலம் ஆய்வு செய்தனர். அதில், போன் செய்தவரின் படம் தெரிந்தது. மொபைல் போன் எண் டவரை வைத்து, அந்நபர், அதே ரயிலில் பயணிப்பதை உறுதி செய்தனர். பின் ரயிலில் தீவிரமாக சோதனையிட்டனர். ரயிலில் பயணித்த அந்நபரை கைது செய்தனர்.
தனி நபர்
அவர், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீப் சிங் ராத்தோர், 33, என்பதும், டில்லியில் இருந்து குண்டக்கல்லுக்கு தனியாக செல்வதும் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.
அவர் கூறுகையில், 'புதுடில்லியில் இருந்து குண்டக்கல்லுக்கு தனியாக சென்று கொண்டிருந்தேன். திடீரென எனக்கு பயம் ஏற்பட்டது. ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறினேன். போலீசார் பிடித்து விடுவர் என்ற அச்சத்தில் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்தேன்' என, தெரிவித்துள்ளார்.
அவரை கைது செய்த ரயில்வே போலீசார், சித்தாபூர் சிறையில் அடைத்தனர்.