/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
/
மெட்ரோ நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
மெட்ரோ நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
மெட்ரோ நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : நவ 19, 2025 09:03 AM
பெங்களூரு: 'விவாகரத்து செய்த மனைவிக்கு தொல்லை கொடுத்தால், மெட்ரோ ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன்' என, மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடந்த 13ம் தேதி ஒரு இ - மெயில் வந்தது. அதில், 'வேலை நேரம் முடிந்த பின்னரும், விவாகரத்து பெற்ற என் மனைவி பத்மினிக்கு, மெட்ரோ ரயில் ஊழியர்கள் யாராவது தொந்தரவு கொடுத்தால்... உங்கள் மெட்ரோ நிலையங்களில் ஒன்று வெடித்து சிதறும் ஜாக்கிரதை' என குறிப்பிட்டதுடன், தன்னை கன்னடர் எதிர்ப்பு தேச பக்தர் என்று கூறிப்பிட்டு உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த நம்ம மெட்ரோ உதவி நிர்வாக பொறியாளர் ரதீஷ் தாமஸ், மறுநாள் வில்சன் கார்டன் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, ராஜிவ், 62, என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து பெங்களூரு மத்திய பிரிவு டி.சி.பி., அக் ஷய் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட ராஜிவ், 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அவரது மனைவி மெட்ரோ ரயிலில் பணியாற்றவில்லை. ராஜிவுக்கு மனநல பிரச்னை உள்ளது. ஐந்து ஆண்டுகளாக நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெல்லந்துாரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரின் அன்றாட தேவைகளுக்கு அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் உதவி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

