தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாட்டு துப்பாக்கி தயாரித்து ரவுடிகளுக்கு விற்றவர் கைது

 நாட்டு துப்பாக்கி தயாரித்து ரவுடிகளுக்கு விற்றவர் கைது

 நாட்டு துப்பாக்கி தயாரித்து ரவுடிகளுக்கு விற்றவர் கைது


ADDED : ஜூன் 01, 2026 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்பது கைத்துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பெலகாவி மாவட்டம், கானாபூர் தாலுகா கட்கலி கிராமத்தை சேர்ந்தவர் மாருதி ஸ்ரீகாந்த், 48. இவர் நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து, அதை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தார்.

இது குறித்து, பெலகாவி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்.பி., ராமராஜன் வழிகாட்டுதலின் படி, தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீகாந்த் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 9 கைத்துப்பாக்கிகள், 100க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், வெடி மருந்துகள், துப்பாக்கி தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் தன்னிடம் துப்பாக்கி வாங்கியவர்களின் விபரங்களை போலீசிடம் வழங்கினார். ரவுடிகளுக்கு துப்பாக்கிகளை அதிக விலைக்கு இவர், விற்பனை செய்து பணம் சம்பாதித்து தெரிய வந்தது.

மேலும், 2024ல் பெலகாவி நந்தகிரியில் நடந்த கொலை வழக்கில், ஸ்ரீகாந்த் தயாரித்த துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து, மாவட்ட எஸ்.பி., ராமராஜன் கூறியதாவது:

இவரிடம் துப்பாக்கி வாங்கிய மற்றும் அவருக்கு துப்பாக்கி தயாரிக்க உதவிய, 13 பேரை கைது செய்து உள்ளோம். இதுவரை, அவர் எட்டு துப்பபாக்கிளை விற்பனை செய்து உள்ளார்.

நாட்டு துப்பாக்கிகளை விற்பது, வாங்குவது மிகப்பெரிய குற்றம். இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us