லோரி மேம்பாலத்தின் கீழ் சாலையில் வாகனங்கள் செல்ல தற்காலிக தடை
லோரி மேம்பாலத்தின் கீழ் சாலையில் வாகனங்கள் செல்ல தற்காலிக தடை
ADDED : ஜூன் 01, 2026 12:15 AM
பெங்களூரு: ரயில்வே பணிகள் காரணமாக, லோரி மேம்பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் வாகனங்கள் செல்வதற்கு, வரும் 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
லோரி மேம்பாலத்திற்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளங்ளகளில் புதுப்பிக்கும் பணிகள் நடக்க உள்ளன. இதனால், லோரி மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலையில், வரும் 4 முதல், 9ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஒயிட்பீல்டு, ஐ.டி.பி.எல்., பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கே.ஆர்., புரம் கேபிள் ஸ்டேடு பாலம் வழியாக பயணிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். கே.ஆர்.புரம், ராமமூர்த்தி நகர், ஐ.டி.ஐ., காலனி, ஐ.டி.பி.எல், ஒயிட்பீல்டு போன்ற பகுதிகளுக்குப் பயணம் செய்வோர், கூடுதலாக பயண நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
