தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பார்ட்டி கேட்ட நண்பரை கொலை செய்தவர் கைது

 பார்ட்டி கேட்ட நண்பரை கொலை செய்தவர் கைது

 பார்ட்டி கேட்ட நண்பரை கொலை செய்தவர் கைது


ADDED : ஜூன் 28, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: பெலகாவி மாவட்டம், பைலஹொங்களா தாலுகாவின், வன்னுாரா கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தப்பா யமனப்பா இடகி, 33. இவரும் இதே கிராமத்தில் வசிக்கும் விஸ்வநாத், 40, என்பவரும் நண்பர்கள்.

தினமும் சேர்ந்து மதுபானம் அருந்துவதும் வழக்கம். சில நாட்களுக்கு முன், விஸ்வநாத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தை பிறந்ததற்கு, பார்ட்டி கொடுக்கும்படி விஸ்வநாத்திடம், ஹனுமந்தப்பா நட்பு முறையில் கேட்டார். இதே விஷயத்தால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.கோபமடைந்த விஸ்வநாத், ஹனுமந்தப்பாவின் மண்டையில் கல்லால் ஓங்கி அடித்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த விஸ்வநாத்தை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us