/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'லிப்ட்' கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது
/
'லிப்ட்' கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது
'லிப்ட்' கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது
'லிப்ட்' கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : ஜன 15, 2026 07:09 AM

சிக்கபல்லாபூர்: 'லிப்ட்' கொடுப்பதாக கூறி, பைக்கில் அழைத்து சென்று, கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிக்கபல்லாபூர் அருகே பெரேசந்திரா கிராமத்தில் வசிக்கும் தம்பதியின் 17 வயது மகள், பாகேபள்ளியில் உள்ள அரசு கல்லுாரியில் பி.யு., முதலாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்ததும், பாகேபள்ளியில் இருந்து பெரேசந்திரா கிராஸ் பகுதிக்கு பஸ்சில் வந்தார்.
கிராமத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்து நின்றார். அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர், மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பைக்கில் லிப்ட் தருவதாக கூறினார். இதனை நம்பிய மாணவியும் பைக்கில் ஏறி சென்றார்.
வனப்பகுதிக்குள் பைக்கை ஓட்டி சென்ற அந்த நபர், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தார். பின், தனது தவறை உணர்ந்து, நண்பருக்கு மொபைல் போனில் பேசி, தவறு செய்து விட்டேன்; என்னை காப்பாற்று என்று கூறி உள்ளார்.
இதற்கு மறுத்த நண்பர், போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அந்த நபரின் மொபைல் போன் டவர் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதிக்குள் சென்ற போலீசார், மாணவியை மீட்டனர்.
அந்த நபரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர் சிக்கபல்லாபூர் டவுனில் வசிக்கும் கணேஷ், 32 என்பதும், அவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது. அவர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ், பெரேசந்திரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

