/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமான நிலையத்தில் கத்தியுடன் ஓடியவர் கைது
/
விமான நிலையத்தில் கத்தியுடன் ஓடியவர் கைது
ADDED : நவ 19, 2025 09:03 AM

தேவனஹள்ளி: பெங்களூரு விமான நிலையத்தில் கையில் கத்தியுடன் ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு, தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கவுடா விமான நிலையத்தின் 1வது முனையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஒரு நபர் திடீரென கையில் கத்தியுடன், இருவரை தாக்க விரட்டிச் சென்றார்.
இதை பார்த்த சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்நபரை உடனடியாக தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த கத்தியையும் பிடுங்கினர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர், சோஹைல் அகமது என்று தெரியவந்தது. இவரைவிமான நிலையத்தில் டாக்சி ஓட்டும் ஜெகதீஷ், ரேணு குமார் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு தாக்கினர். இவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் இருவரையும் சோஹைல் அகமது தாக்க வந்தது, தெரியவந்தது.
அவர் விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

