/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளிடம் பேசுவதை கண்டித்த தந்தையை குத்தி கொன்றவர் கைது
/
மகளிடம் பேசுவதை கண்டித்த தந்தையை குத்தி கொன்றவர் கைது
மகளிடம் பேசுவதை கண்டித்த தந்தையை குத்தி கொன்றவர் கைது
மகளிடம் பேசுவதை கண்டித்த தந்தையை குத்தி கொன்றவர் கைது
ADDED : ஏப் 17, 2025 01:18 AM
பெங்களூரு : தன் மகளுடன் பேச வேண்டாம் என்று மரக்கடையில் பணியற்றும் ஊழியரிடம் எச்சரித்த தந்தையை, குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு குமாரசாமி லே - அவுட்டை சேர்ந்தவர் சையது அஸ்லாம், 60. இதே பகுதியில் உள்ள தனது சகோதரரின் எஸ்.பி., டிம்பர் ஸ்டோர்ஸ் என்ற மரக்கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இக்கடையில் இலியாஸ் நகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ், 23, மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடைக்கு அடிக்கடி வரும் சையது அஸ்லாம் மகளுடன், சூர்யபிரகாஷ் சிரித்து பேசியபடி இருப்பார்.
ஏற்கனவே, தன் மகளிடம் பேச வேண்டாம் என்று சூர்யபிரகாசுக்கு, சையது அஸ்லாம் எச்சரிக்கை விடுத்திருந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு குடிபோதையில் வந்த சூர்ய பிரகாசிடம், மீண்டும் தன் மகளிடம் பேசியது குறித்து எச்சரித்தார்.
ஏற்கனவே குடிபோதையில் இருந்த சூர்யபிரகாஷ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், கோபம் முற்றி, கடையில் இருந்த கத்தியால், சையது அஸ்லாமை சரமாரியாக குத்தினார்.
இதை பார்த்த அப்பகுதியினர், அஸ்லாமை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். கொலை செய்த சூரிய பிரகாஷை, குமாரசாமி லே - அவுட் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.