/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
400 கிலோ தலைமுடியை திருடி ரூ.25 லட்சத்துக்கு விற்றவர் கைது
/
400 கிலோ தலைமுடியை திருடி ரூ.25 லட்சத்துக்கு விற்றவர் கைது
400 கிலோ தலைமுடியை திருடி ரூ.25 லட்சத்துக்கு விற்றவர் கைது
400 கிலோ தலைமுடியை திருடி ரூ.25 லட்சத்துக்கு விற்றவர் கைது
ADDED : ஏப் 19, 2025 05:32 AM

சோழதேவனஹள்ளி: 'விக்' தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தலைமுடியை திருடி, 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தவர்களில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு சோழதேவனஹள்ளி, லட்சுமிபுரா கிராசில் உள்ள ஒரு கிடங்கில் 'விக்' தயாரிப்பதற்காக பெண்களிடம் இருந்து சேகரித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தலைமுடி கடந்த மாதம் 1ம் தேதி, திருட்டு போனது.
இதுகுறித்து, சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில், கிடங்கின் உரிமையாளர் வெங்கடரமணா புகார் அளித்தார்.
விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோழதேவனஹள்ளி போலீசார், ஆய்வு செய்தனர். ஐந்து பேர் கொண்ட கும்பல், சரக்கு லாரியில் தலைமுடியை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இந்த காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், திருட்டில் முக்கிய குற்றவாளியான கதக்கை சேர்ந்த யலப்பா கொல்லர், 27, என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர், 'திருடிய 400 கிலோ தலைமுடி சென்னராயப்பட்டணா, ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து டீலர்கள் மூலம் சீனா, பர்மா, ஹாங்காங் நாடுகளுக்கு விக் செய்வதற்காக அனுப்பப்பட்டது.
ஒரு கிலோ தலைமுடி 6,000 முதல் 7,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதன் மூலம் 25 லட்சம் ரூபாய் கிடைத்தது' என தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.