தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மூதாட்டியை கழுத்தறுத்து கொன்று நகையை கொள்ளையடித்தவர் கைது 

 மூதாட்டியை கழுத்தறுத்து கொன்று நகையை கொள்ளையடித்தவர் கைது 

 மூதாட்டியை கழுத்தறுத்து கொன்று நகையை கொள்ளையடித்தவர் கைது 


ADDED : பிப் 20, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெலமங்களா: கணவர் கண்முன்னே மூதாட்டியை கழுத்தறுத்து கொன்றதுடன், வீட்டில் இருந்த, 100 கிராம் நகையை கொள்ளையடித்து சென்றவர் கைது செய்யப்பட்டார். .

பெங்களூரு ரூரல் மாவட்டம் நெலமங்களா டவுன் ஹீராபுரா கோட்டே வீதியில் வசிப்பவர் ரங்கநாத், 65. இவரது மனைவி ஷோபா, 65. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ரங்கநாத் படுத்த படுக்கையானார்.

இவரை, மனைவி தான் கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஷோபா வீட்டிற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென வீட்டிற்குள் புகுந்தார்.

படுக்கை அறைக்குள் ஷோபாவை பிடித்து தள்ளிய மர்மநபர், ரங்கநாத் கண்முன்னே ஷோபாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றார். பின், வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்பினார்.

ரங்கநாத்திற்கு சிகிச்சை அளிக்கும் பிசியோதெரபி டாக்டர் இரவு அங்கு வந்து பார்த்த போது, ஷோபா கொலையானது தெரிய வந்தது.

தகவல் அறிந்ததும் நெலமங்களா டவுன் போலீசார், பெங்களூரு ரூரல் எஸ்.பி., சந்திரகாந்த், அங்கு விரைந்து சென்றனர்.

பக்கத்து வீட்டினரிடம் விசாரித்து தகவல் சேகரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிவது பதிவாகி இருந்தது.

அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, ஷோபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் கொள்ளையடித்த, 100 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சிவகுமார், 35 என்பதும், மொத்த வியாபார கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. வியாபாரத்திற்காக எட்டு லட்சம் ரூபாய் சிவகுமார் கடன் வாங்கி இருந்தார். கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார்.

காய்கறி கடைக்கு சென்று வந்த ஷோபா கழுத்தில் நிறைய நகை அணிந்திருந்ததை கவனித்த சிவகுமார், ஷோபாவை கொன்று வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us