/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நுாதன முறையில் திருட்டு ; தொழில்நுட்ப கல்வி படித்தவர் கைது
/
நுாதன முறையில் திருட்டு ; தொழில்நுட்ப கல்வி படித்தவர் கைது
நுாதன முறையில் திருட்டு ; தொழில்நுட்ப கல்வி படித்தவர் கைது
நுாதன முறையில் திருட்டு ; தொழில்நுட்ப கல்வி படித்தவர் கைது
ADDED : டிச 15, 2025 06:06 AM

ஆனேக்கல்: தொழில்நுட்ப கல்வியை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு தப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தவர், ஜிகினியில் தன் அக்கா வீட்டுக்கு வந்த போது, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவின் முள்ளள்ளி கிராமத்தில் வசிப்பவர் சிவகுமார், 35. இவர் பல ஆண்டுகளாக திரு ட்டில் ஈடுபட்டு வந்தார். கர்நாடகாவின் பல்வேறு நகரங்கள் மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கை வரிசையை காண்பித்தார்.
கொலை, வழிப்பறி, கொள்ளை, வாகன திருட்டு குறித்து, இவர் மீது நான்கு மாநிலங்களின் பல்வேறு போலீஸ் நிலையங்களில், 60 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரை போலீசார் தேடி வந்தனர்.
பெங்களூரின் சிவாஜிநகரில் உள்ள ஜெட் கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில், 'மேனேஜ்மென்ட் ஆப் நெட் ஒர்க்கிங் அட்மினிஸ்ட்ரேஷன் கோர்ஸ்' படித்தவர்.
இங்கு கற்ற தொழில்நுட்ப கல்வியை, திருட்டில் ஈடுபட்டு சிக்காமல் தப்புவது எப்படி என்பதற்கு பயன்படுத்தினார்.
திருட்டின் போது, எந்த தடயத்தையும் விட்டு வைக்காமல் தப்பினார். போலீசாருக்கும் தலைவலியாக இருந்தார்.
இதற்கிடையே நடப்பாண்டு நவம்பரில், பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், ஜிகனியில் வீடு ஒன்றில் திருட்டு நடந்தது.
வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின்படி, ஜிகனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்டது சிவகுமார் என்பது தெரிந்தது. அவரை பற்றி விசாரிக்க துவங்கினர்.
ஜிகனியில் உள்ள தன் அக்காவின் வீட்டுக்கு, சிவகுமார் அவ்வப்போது வந்து செல்வது தெரிந்தது. திருட்டு பொருட்களை அக்காவிடம் கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இதை போலீசார் அறிந்தனர்.
அவர்கள், சிவகுமாரின் அக்கா வீட்டின் பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்தனர்.
அங்கு தங்கி கண்காணித்து வந்தனர். ஒவ்வொரு முறை வரும் போதும், அக்காவுக்கு மொபைல் போனில், சிவகுமார் தகவல் கூறுவார். அதன்படி நேற்று காலையில் வருவதாக கூறியிருந்தார். இதையறிந்து மப்டியில் இருந்த போலீசார் உஷாராகினர்.
அக்கா வீட்டின் அருகில், சிவகுமார் பைக்கில் வந்தவுடன், அவரை ஜிகனி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் தப்பியோடும் நோக்கில், பைக்கை திருப்பும் போது, கீழே விழுந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்தனர். அவரிடமிருந்து 130 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

