/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைதானவர் தேர்தலில் போட்டி
/
பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைதானவர் தேர்தலில் போட்டி
பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைதானவர் தேர்தலில் போட்டி
பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைதானவர் தேர்தலில் போட்டி
ADDED : ஜன 10, 2026 06:46 AM

பெங்களூரு: கர்நாடகாவின் பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புள்ள நபர், மஹாராஷ்டிரா தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
கர்நாடகாவின் பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், எழுத்தாளராகவும் இருந்தார். 2017 நவம்பர் 5ம் தேதி, பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டு வாசலிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பங்கார்கருக்கு தொடர்பிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 2018 ஆகஸ்டில் கைதானார்.
இவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், 2024 செப்டம்பர் 4ல் ஜாமின் அளித்தது. தற்போது இவர், மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறார்.
மஹாராஷ்டிராவின், ஜல்னா முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு, ஜனவரி, 15ல் தேர்தல் நடக்கிறது. வார்டு எண் 3ல், ஸ்ரீகாந்த் பங்கார்கர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.